சட்டப்பேரவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி யில் இணைந்து போட்டியிட முடிவு செய்த எஸ்டிபிஐ கட்சி, கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்தது.
இந்த சூழலில் தேர்தலில் தனித்து நிறபதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது நேற்று வெளியிட்ட அறிக்கை:
எதிர் வரும் சட்டப் பேரவை தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் நிலைபாடு குறித்து மாநில செயற்குழு கூடி விவாதித்தது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2016 சட்டப் பேரவை தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஓரிரு தினங்களில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் முதல்பட்டியல் வெளியிடப்படும்.