சென்னை: சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: திமுகவின் முக்கிய வாக்குறுதி மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம்.அரசின் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே, இப்போதைக்கு இத்திட்டம் செயல்படுத் தப்படாது. மதுவிலக்கு அமலாக்கம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவை தொடர்பான எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாகவோ, ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்அறிக்கையாகவோ பட்ஜெட் இல்லை. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.