தமிழகம்

திருநங்கையர்க்கு இலவச கல்வி: சென்னை பல்கலை. அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான இலவச கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி கூறியதாவது: சென்னை பல்கலைக்கழகம் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஏற்கெனவே ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டம் அமலில் உள்ளது. தொடர்ந்து திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அதன்படி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 131 கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தலா ஒரு இடத்தை திருநங்கைகளுக்கு ஒதுக்க முடிவாகியுள்ளது. இதற்கான ஒப்புதல் ஆட்சிமன்றக் கூட்டத்தில் பெறப்பட்டு, 2022-23-ம் கல்வியாண்டு அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் திருநங்கைகளிடம் உயர்கல்வி பயில்வதற்கான ஊக்கத்தையும் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் திருநங்கைகளுக்கு இலவச இடம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT