தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று சேலத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சியினருடன் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் இணக்கமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக வேட்பாளர்கள் 104 பேர், மாவட்டச் செயலாளர்கள் 54 பேர், மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை மற் றும் தேர்தல் பயிற்சிக் கூட்டம் நேற்று சேலத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தோழமை கட்சியி னருடன் தேமுதிக நிர்வாகிக ளும், தொண்டர்களும் கருத்து வேறுபாடின்றி முழு ஒத்துழைப்பு கொடுத்து, தேர்தல் பணியாற்ற வேண்டும். வெற்றி பெற உழைப்பு மட்டுமே முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக தேமுதிக பிர முகர்கள் தெரிவித்தார்.
கூட்டத்தில் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக இளை ஞரணி செயலாளர் சுதீஷ், பொரு ளாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
தமிழகத்தை தலைநிமிரச் செய்வேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், அவரது கட்சி வேட்பாளர்கள் கீழேதான் இருக்கிறார்கள். ஜெயலலிதா முதலில் அவரது கட்சியினரை தலைநிமிரச் செய்யட்டும். இனி மேல் நான் அதிகமாக பேச மாட்டேன். செயலில் காட்டுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொண்டர் படை வீரருக்கு அடி
சேலம் கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த் வந்தபோது, பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். பத்திரிகையாளர்களை விலகச் சொல்வது போல் விஜயகாந்த் இருமுறை கைகளை வேகமாக அசைத்தார். ஒரு கட்டத்தில் கையை வேகமாக ஓங்கினார். பின்னர் அவரை சூழ்ந்திருந்த தேமுதிக நிர்வாகிகளுடன், மாடிப்பகுதிக்கு படியில் ஏறினார்.
அப்போது, அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த தேமுதிக தொண்டர் படை வீரரை கோபத்துடன் பார்த்த விஜயகாந்த், அவரை தனது முழங்கையால் இரண்டு முறை வேகமாக இடித்து தாக்கியபடி மாடிப்படியில் மேலேறி சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.