தமிழகம்

தமிழகத்தின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் 3 மாதங்களில் மின்னணு கட்டண முறை அமல்படுத்தப்படும்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் அடுத்த 3 மாதங்களில் மின்னணு கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்கு வரத்து நெரிசலுடன் காலதாமதமும் ஏற்படுகிறது. எனவே, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ‘மின்னணு கட்டண வசூல் முறை’ அமல்படுத்தப்பட்டு வருகி றது. தமிழகத்தில் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நெடுஞ் சாலைகளில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசை யில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. எனவே மின்னணு கட்டணம் வசூல் முறையை படிப்படியாக அமல்படுத்த வுள்ளோம்.

கடந்த 2015 டிசம்பருக்குள் தமிழகத் தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடி களிலும் மின்னணு கட்டண முறையை அமல்படுத்திட திட்டமிட்டோம். ஆனால், சென்சார் பொருத்தும் பணிகள், வங்கி களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளால் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் மின்னணு கட்டண வசூல் முறையை கொண்டுவர பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர்.

SCROLL FOR NEXT