விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று 2 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மாற்றியுள்ளது.
இகுகுறித்து கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கு.கா.பாவலன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சிவகங்கை மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளரான தீபா என்கிற திருமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வானூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ம.தமிழ்செல்வன் மாற்றப்பட்டு கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.