தமிழகம்

மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மின்சாரம்: பன்னாட்டு நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

மின்சார வசதி இல்லாத கிராமங் களில் ‘மைக்ரோகிரிட்’ தொழில் நுட்பம் மூலம் மின்வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஏபிபி என்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஐஐடியில் நேற்று கையெழுத் தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மைக்ரோகிரிட்டுகள் தயாரிப்பு, கிராமப்புற மின்மயமாக்கல், பசுமை எரிசக்தி திட்டம், பேட்டரியில் மின்சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து செயல்படும். பரஸ்பரம் தொழில்நுட்பங்களும் பரிமாறிக்கொள்ளப்படும். சென்னை ஐஐடி முதுகலை மாணவர்கள் ஏபிபி நிறுவனத்தில் தொழில்பயிற்சி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறும்போது, “மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு குறைந்த செலவில் மின்சாரத்தை கொண்டுசெல்வதற்கான தொழில் நுட்பத்தை கண்டறிய ஐஐடி உறுதிபூண்டுள்ளது. மின்கட் டணத்தை குறைப்பதிலும் இந்த புதிய தொழில்நுட்பம் பெரிதும் உதவும். 2013-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து வாகனங் களும் முற்றிலும் மின்சக்தியால் இயங்கக்கூடிய சூழல் உருவாக லாம்.

அதற்கேற்ப புதிய தொழில் நுட்பத்தை விரைவாக கொண்டுவர இந்த புரிந் துணர்வு ஒப்பந்தம் உதவும்” என்று குறிப்பிட்டார். ஏபிபி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உல்ரிச் ஸ்பீஸ் சோபர் கூறும்போது, “புகழ்பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவன மான சென்னை ஐஐடி-யுடனும் இளம் மாணவர்களுடனும் எங்களின் நிபுணர்கள் இணைந்து செயல்பட ஒரு பெரிய வாய்ப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தந்துள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT