தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக் கறிஞர் மணிசெந் திலை ஆதரித்து, கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
மீண்டும் மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டால் நாம் உருப்படவே முடியாது. இந்த இரு ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும்.
கருணாநிதி கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்துள்ளார். ஜெயலலிதா 15 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளார். ஆண்டுதோறும் 2,500 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க, கடந்த 50 ஆண்டுகளில் ஒரு நீர்தேக்கத்தையும் இவர்கள் ஆட்சியில் கட்டவில்லை. மக் களுக்குத் தேவை யான அடிப்படை உரிமையான கல்வி, மருத்துவம் போன்றவற்றை வழங்காத, கடமை தவறிய அரசுகள்தான் திமுக, அதிமுக அரசுகள்.
நாம் தமிழர் ஆட்சியில், காவலர்களுக்கு 8 மணி நேரப் பணி, பெண் காவலர்களுக்கு 6 மணி நேரப் பணி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்கப்படும். காக்கிச் சீருடை மாற்றப்படும். அனைத்தும் கணினிமயமாக்கப் படும், வீட்டைத் தவிர அனைத்து இடங்களும் கண் காணிக்கப்படும். இதன் மூலம் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.