கீரப்பாளையம் அருகே சக்தி விளாகம் கிராமத்தில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தை அடுத்த கீரப் பாளையம் அருகே உள்ள சக்திவிளாகம் கிராமத்தில், விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது தர்பூசணி அறுவடையை நெருங்கியுள்ளது. பருவநிலை மாற்றத்தாலும், இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையா லும் போதிய விளைச்சல் இல்லாமல்விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தர்பூசணி பயிரில்கடும் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்குதலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்தெளிக்கப்பட்டும், கட்டுப்படுத்தப் படாமல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்கின்றனர் விவசா யிகள்.
"கடந்த 2 ஆண்டுகளாக தர்பூசணி விளைச்சல் நல்ல முறையில் இருந்தது. அப்போது கரோனா காலகட்டம் என்பதால் போதிய வியாபாரம் இல்லாமல் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. தற்போது தர்பூசணி விளைச்சல் பாதிப்பால் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கவலையை அளிக்கிறது. வழக்கமான செலவினங்களை விட தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவு ஏற்பட்டுள்ளது" என்கின்றனர் விவசாயிகள்.
இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து விவசாயிக ளுக்கு உரிய ஆலோசனையை வழங்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதிவிவசாயிகள்.