மதுரை: தாலிக்குத் தங்கம் திட்டம் 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததாக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 486 பேருக்கு ரூ.59.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்தி கேயன் தலைமை வகித்தனர். மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கி யும் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பேசியதாவது: தமிழக பட்ஜெட்டில் கல்வி, மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியத் துவம் அளித்துள்ளோம்.
ஆதரவற்றோர், பின் தங்கி யோர், இதுவரை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு எல்லா திட்டங்களும் சேரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதைத்தான் முதல்வர் செயல் படுத்தி வருகிறார்.
தாலிக்கு தங்கம் திட்டம் 4 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்தது. இதை எப்படியாவது திருத்த வேண்டும், காலத்துக்கு ஏற்ப மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பள்ளியில் இருந்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.