கோட்டையூரில் அ.க.அறக்கட்டளை சார்பில் சீரமைக்கப்பட்ட அழ.வள்ளியம்மை ஆச்சி நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. 
தமிழகம்

காரைக்குடி | சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கிய ஊராட்சி ஒன்றிய பள்ளி சீரமைப்பு

செய்திப்பிரிவு

காரைக்குடி அருகே கோட்டை யூரில் 1930-ம் ஆண்டு பள்ளி தொடங்கியபோது வள்ளல் அழகப்பரும், அவரது மனைவி அழ.வள்ளியம்மை ஆச்சியும் தங்களது வீட்டைக் கொடையாக கொடுத்தனர். மேலும் இங்கு முதல்முறையாக மதிய உணவு திட்டமும் செயல்படுத்தப்பட்டது.

அழ.வள்ளியம்மை ஆச்சி நினைவு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியாக 2 கட்டிடங் களில் செயல்பட்டது. இங்கு 198 மாணவர்கள், 7 ஆசிரியர்கள் உள் ளனர்.

இந்நிலையில் இப்பள்ளிக்கான 2 கட்டிடங்களும் சேதமடைந்தன. இதையடுத்து ரூ.6.15 லட்சத்தில் பள்ளியை அ.க.குடும்ப அறக் கட்டளையினர் சீரமைத்தனர்.

இதன் திறப்புவிழா நடந்தது. சாக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் சே.பரிமளம், அ.க. குடும்ப அறக்கட்டளைத் தலைவர் சுந்தர மணிவாசகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதில் தலைமை ஆசிரியர் சு.பரிமளா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT