விழுப்புரத்தில் நடந்த திருநங்கை களுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் சேலம் காயத்ரி முதலிடத்தையும், மலேசியாவைச் சேர்ந்த பவானி 2-ம் இடத்தையும், சென்னை குஷி 3-ம் இடத்தையும் பெற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இங்கு, நேற்று இரவு பூசாரி கையால் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை அரவாண் களபலி நிகழ்ச்சி யும், கூத்தாண்டவர் தேரோட்டமும் நடக்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்காக மும்பை, கொல்கத்தா, பெங்களூரு என பல்வேறு மாநிலங்களில் இருந் தும், தமிழகத்தின் பல மாவட்டங் களில் இருந்தும், மலேசியா, சிங்கப் பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்துக்கு வந்துள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களாக விழுப்புரம் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழுப்புரம் ஆஞ்சநேயர் திரு மண மண்டபத்தில் நேற்று முன் தினம் இரவு ‘மிஸ் கூவாகம்' போட்டி நடந்தது. நடுவர்களாக நடிகை ஷகிலா, நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், திருநங்கை நூரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ‘மிஸ் கூவாகம் 2016' அழகி பட் டத்தை சேலம் காயத்ரி பெற்றார். 2-ம் இடத்தை மலேசியாவைச் சேர்ந்த பவானியும், 3-ம் இடத்தை சென்னையைச் சேர்ந்த குஷியும் பிடித்தனர்.
முன்னதாக இப்போட்டியில் பங்கேற்ற திருநங்கை ஒருவரிடம் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:
வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து ஒரு கட்டத்தில் திருநங்கை என அறிந்தவுடன் வீட்டை விட்டு விரட்டப்படும் என்னைப் போன்றோர், சொந்த ஊரை விட்டு வெளியேறி ஏதோ ஒரு ஊரில் உள்ள ஒரு திருநங்கையிடம் அடைக்கலமாவோம்.
அந்த மாவட்டத்தில் உள்ள 'நாயக்' எனப்படும் தலைவியின் கட்டுப்பாட்டில் வாழ்க்கையை ஆரம்பித்து எனக்கான வருவாயை நானே ஈட்ட வேண்டும். அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை நாயக்கிடம் அளிக்க வேண்டும், அவருடன் தங்கி கொள்ளலாம்.
ஒரு வேளை உணவு உட்கொள் ளலாம், எங்கள் உடமைகளை பாது காப்பாக வைத்து கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்கவும், சட்ட சிக்கலில் சிக்கினால் மீட்கவும், அரசின் உதவியை பெறவும் நாங்கள் அளிக்கும் தொகையை எங்களுக்காக செலவழிப்பார்கள்.
அதே ஊரில் மாற்றுக் கருத்து கொண்ட வேறு ஒரு நாயக்கும் (தலைவி) இருப்பார். ஒருவேளை நாங்கள் சார்ந்திருக்கும் நாயக் கிடம் கருத்து வேறுபாடு ஏற்பட் டால் அங்கிருந்து விலகி, எனக்கு ஒத்த கருத்துடைய நாயக்கிடம் இணைந்துகொள்ள, எனது திறமை, வருவாய் ஆகியவற்றுக்கு தகுந் தாற்போல கணக்கிட்டு நாயக் சொல்லும் ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறலாம்.
உயிர்க்கொல்லி நோய் கொண்டவரிடம் காட்டும் கரி சனத்தைக்கூட இச்சமூகம் எங்க ளுக்கு காட்டுவதில்லை. வட மாநிலங்களில் திருநங்கைகளுக்கு நல்ல மரியாதை அளிக்கப்படுகிறது. தென் இந்தியாவில் அந்த நிலை இல்லை.
குடும்பத்தாரால் ஏற்றுக்கொள் ளப்பட்ட திருநங்கைகளை நீங்கள் எங்கேனும் கண்டாலும் உங்களால் அவர்களை திருநங்கை என உணரமுடியாது. மனோ ரீதியாக தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற் பட்டுவிட்டால் தங்களது உடல் மொழி, ஆடை அலங்காரத்தில் கண்ணியம் காக்கின்றனர். ஆனால் அப்படி ஒரு சூழல் அமையாதவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சற்று கண்ணிய குறைவாக நடந்து கொள்கின்றனர்.
தானும் ஒரு குடும்ப தலைவி யாக, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என அனைத்து திருநங்கையும் ஆசைப்படுகிறார் கள். பொய்யாகக்கூட தன்னை விரும்புவதாக சொன்னால் (அது பொய் என தெரிந்தும்) அதற்கு உடன்படுகிறார்கள். அத்தகைய திருநங்கைகள் அவர்களே தங்கள் காதல் கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணமும் செய்து வைப்பது, குடும்ப செலவுக்கு சம்பாதித்து கொடுப்பதும் உண்டு.
பொதுவாக திருநங்கைகளுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். அதனால் சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். அவர் களையும் சக மனிதராக மதித்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இச்சமூகம் அரவணைத்து செல்லவேண்டும் என எதிர்பார்க்கின் றனர். இவ்வாறு அவர் கூறினார்.
படங்கள்: எம்.சாம்ராஜ்