தென்கிழக்கு வங்கக் கடலில், தெற்கு அந்தமான் கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபர் தீவு வழியாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மீனவர் கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வங்கக் கடலில் புயல் உருவாகி வருவதை கப்பல்களுக்கு உணர்த்தும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.