அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். உடன் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி. 
தமிழகம்

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை

பெ.பாரதி

அரியலூர்: இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்க இன்று ( மார்ச் 20) வந்த இடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்பியுமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது, “ தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சிறந்த முறையில் பல்வேறு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது.

உக்ரைனில் போரின் காரணமாக மருத்துவ படிப்பு படித்து வந்து திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா இரு நாட்டிடமும் அழுத்தம் கொடுக்க வேண்டும். பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT