தமிழகம்

இரு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மாற்றம்

செய்திப்பிரிவு

அரக்கோணம் (தனி), ஒரத்தநாடு ஆகிய இரு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் (தனி) தொகுதி வேட்பாளர் பவானி நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக என்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளராக ஏற்கெனவே எஸ்.எஸ். ராஜ்குமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு தற்போது புதிய வேட்பாளராக எம்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இரு தொகுதிகளிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது திமுகவினரிடம் அதிருப்தி எழுந்தது. அரக்கோணம் வேட்பாளர் பவானியை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வேட்பாளர்கள் இரு தொகுதிகளில் மாற்றப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT