தமிழகம்

உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்த மனித நேய மக்கள் கட்சி

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது மனித நேய மக்கள் கட்சி. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.

மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக 5 இடங்களை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் திமுகவிடமே உளுந்தூர்பேட்டை தொகுதியை திருப்பி அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா தெரிவித்தார்.

வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய ஜவாகிருல்லா அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

மனித நேய மக்கள் கட்சி தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது:

ராமநாதபுரம்: ஜவாகிருல்லா

தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது

நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா

ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.

SCROLL FOR NEXT