சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மற்றும் மனைவி குடும்பத்தினர் பெயரில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் அசை யும் சொத்துகளும், ரூ.9 கோடியே 35 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.