தமிழகம்

தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க திருத்திய வல்லுநர் குழு அமைப்பு

செய்திப்பிரிவு

தொன்மையான கோயில்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கதிருத்திய மாநில அளவிலானவல்லுநர் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் கட்டுப்பாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோயில்களை, அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்க திருத்திய மாநில அளவிலான வல்லுநர் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. கோயில்களின் திருப்பணிக்கு மண்டல கமிட்டியினால் பரிந்துரைக்கப்பட்டு ஒப்புதல் அளிப்பதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழுவில் உறுப்பினராக ஏற்கெனவே இருந்த கூடுதல் ஆணையர் (திருப்பணி) என்பதை, இணை ஆணையர் (திருப்பணி) என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநில அளவிலான வல்லுநர் குழுவில் தொல்லியல் துறையின் கீழ் கூடுதலாக ஒரு உறுப்பினர் மண்டல உதவி இயக்குநர் (ஓய்வு) ராமமூர்த்தி என்பவரைச் சேர்க்க அரசு நிலையில் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான வல்லுநர்குழுவில் முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி கட்டமைப்பு வல்லுநர், தொல்லியல் கண்காணிப்பாளர் கே.மூர்த்தீஸ்வரி தொல்லியல் துறை வல்லுநர், மாநில தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) முனைவர்.சீ.வசந்தி தொல்லியல் துறைவல்லுநர், தொல்லியல் கண்காணிப்பாளர் (ஓய்வு) தொல்லியல் வடிவமைப்பாளர் முனைவர்.டி.சத்தியமூர்த்தி, கட்டிடம் மற்றும்சிற்பக்கலை வல்லுநர் கே.தட்சிணாமூர்த்தி, மாநில தொல்லியல் துறை கல்வெட்டு படிமங்கள் மற்றும் நுண்கலை நிபுணர் ஆர்.சிவானந்தம், சைவ ஆகமவல்லுநர்கள் சிவ பிச்சை,சந்திரசேகர பட்டர், வைணவ ஆகம வல்லுநர்கள் அனந்தசயன பட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் (திருப்பணி), தலைமைப் பொறியாளர் ஆகியோர் கோயில்களில் திருப்பணிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடிய திருத்திய மாநில அளவிலான வல்லுநர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT