விருத்தாசலம் - திருச்சி மின்சார இருவழி ரயில்பாதை மார்க்கத்தில் அமைந்துள்ள தாழநல்லூர்-சாத்துக்கூடல் இடையே, கிராமப் புறங்கள் வழியாக செல்லும் ரயில் பாதையை கடந்து செல்ல வசதியாக தரைமட்டப் பாலத்தை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்,
இதை பரிசீலித்த தென்னக ரயில்வே நிர்வாகம், பாலம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு, அதற் கான திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்தது. இதையடுத்து பாலப் பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்தது.
அதன்படி ‘ப்ரீகாஸ்ட்’ எனப்படும் தயார்நிலை கட்டுமானப் பொருட்க ளைக் கொண்டு பாலம் அமைக்க திட்டமிட்டனர்.
இதையடுத்து தாழநல்லூர்-சாத்துக்கூடல் இடையே 30 மீட்டர் அகலத்துடன், 4 மீட்டர் உயரம் கொண்ட பாலம் 3 பாலங்கள் அமைக்கும் பணியை 200 மனிதத் திறனைக் கொண்டு தொடங்கினர். 3 பாலங்களையும் 15 மணி நேர குறுகிய கால இடைவெளியில் முடிக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிவடைந்து, பாலத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். 13 மணி 30 நிமிடங்களில் இப்பணியை முடித்து புதிய சாதனைப் படைத் துள்ளதாக தெற்கு ரயில்வே துறையின் திருச்சி கோட்டத்தினர் தெரிவித்தனர்.
பணிகள் குறித்து ஒப்பந்ததாரர் உதயக்குமாரிடம் கேட்டபோது, “தென்னிந்தியா முழுவதும் ‘ப்ரீ காஸ்ட்’ முறைப்படி இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருகி றோம்.
இருப்பினும் விருத்தாசலம் ஜங்கஷனில் இருந்து தாழநல்லூர் இடையேயான 3 பாலங்கள் அமைக்கும் பணியை ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் கடந்த 9-ம் தேதி முதல் செய்து வருகிறோம். இதில், தாழநல்லூரில் பாலம் அமைக்கும் பணியை 13.30 மணி நேரத்தில் முடித்திருப்பது இது தான் முதல் முறை” என்று தெரிவித்தார்.