பெரியகுளம் தாமரைக்குளத்தில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு டி.கள்ளிப்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த அனு என்பவரது மகள் ஜெனிலியா(17) வேதியியல் பிரிவில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் விளையாட்டு தினத்துக்காக கடந்த 17-ம் தேதி கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்தார். கல்லூரி நிர்வாகத்தினர் இவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் ஜெனிலியா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் இவரது உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவியின் மரணம் சந்தேகத்தை ஏற் படுத்துவதாகக் கூறி பெற்றோர், உறவினர்கள் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவர்களிடம், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீ ஸார் உறுதி கூறினர்.