சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொள்ளாமல் யூடியூபர்கள் விரும்பும் பதிவுகளை வெளியிட்டு பணப்பலன் அடைகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கரு ணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பிய வழக் கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்த னையை மீறியதாக சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் போலீஸார் மனுத் தாக் கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வருகிறார். இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது யூடியூப் குற்றங்களை தடுப்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை தெரிவிக்க வழக்கறிஞர் ராமகி ருஷ்ணனை நீதிபதி நியமித்தார்.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், யூடியூப் பதிவுகளை கட்டுப் படுத்துவது தொடர்பான விதிகள், சட்டத் திருத்தங்களை தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிபதி, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யூடியூபர்கள் அவர்கள் விரும்பும் பதிவுகளை வெளியிடுகின்றனர். அதனால் அவர்கள் பணப்பலன் பெறுகின்றனர்.
ஆனால் அந்தப் பதிவுகள் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைகிறது என்றார்.
மேலும் தமிழகத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்க எத்தனை போலீஸார் உள்ளனர்? என்ற விவரத்தை தாக்கல் செய்ய உத்த ரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.