திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கியில் கடந்தஆண்டு மே மாதம் விவசாயி கோவிந்தராஜ் (52) என்பவர் நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். கடந்த 10-ம் தேதிபணத்தை செலுத்தி நகையை திருப்பினார்.
அப்போது, நகையை பரிசோதித்த போது, அதன் எடை குறைந்திருந்தது, தெரியவந்தது. புகாரின்பேரில் வங்கியில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு காமநாயக்கன் பாளையம் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
இவ்விவகாரம் கேத்தனூர் சுற்றுப்பகுதி விவசாயிகளிடையே பரவியதால், பலரும்தொடர்புடைய வங்கிகிளைக்கு சென்று, தங்களது நகை நிலவரத்தை தெரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் கூறும்போது, ‘‘தொடர்புடைய வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளின் எடையும் சரியாக உள்ளதாஎன, வங்கி உதவி பொதுமேலாளர் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்’’ என்றார்.