தமிழகம்

ஹிஜாப் உடைக்கான தடையை எதிர்த்து திருப்பூரில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் உடை அணிந்து செல்ல முஸ்லிம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், கர்நாடக அரசின் உத்தரவு செல்லுமென கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் காங்கயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் தடையைகண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹிஜாப் உடைக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT