கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பங்கேற்ற கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் கொமதேகவுக்கு கிடைக்கும். அதன்மூலம், நாங்கள் வெற்றி பெறுவோம்.
சுயஉதவிக்குழு, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர் களை ஒருங்கிணைத்து தொகுதி மேம்பாட்டுக் குழு அமைப்போம். அதன் வழிக்காட்டுதல்படி தொகுதிக்குண்டான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். 72 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதில், சென்னையில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இவ்வாறு கூறினார்.