புதுச்சேரி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சண்டே மார்க்கெட் கிளை மாநாடு நேற்று நடந்தது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் பாரம்பரியமிக்க சண்டே மார்க்கெட்டை இடமாற்றம் செய் வதை கைவிட வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத் தின்படி நிரந்தரமாக இருக்கும் இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சண்டே மார்க்கெட்டில் குடிநீர், நடமாடும் கழிப்பிடம், மருத்துவ வசதி செய்து தர வேண்டும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும். அடிக்காசு வசூலை அரசே நடத்த வேண்டும்.
கரோனா காலத்தில் வருமா னமின்றி தவித்த குடும்பத்துக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பில் இருந்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் ஊர்வலமாக வந்து, மாநாட்டில் பங்கேற்றனர்.