மதுரை சித்திரைத் திருவிழா பொருட்காட்சியை, இந்த ஆண்டு மாட்டுத்தாவணிக்கு மாற்று வதற்கு ஏற்பாடுகள் நடந்தன. இந்நிலையில் அதிமுகவின் எதிர்ப்பால் பொருட்காட்சியை மீண்டும் தமுக்கத்திலேய நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் சுற்றுவட்டார கிராம மக் கள் தமுக்கத்தில் சுற்றுலாத் துறை பங்களிப்புடன் செய்தி, மக்கள் தொடர்பு துறை சார் பில் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா பொருட்காட்சியையும் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைவர்.
தற்போது தமுக்கத்தில் ரூ.45.5 கோடி செலவில் வர்த்தக மையம் அமைக் கப்படுகிறது. இந்த மையம் கட்டுமானப்பணி இன்னும் நிறைவடையாததால் இந்த ஆண்டு சித்திரைப்பொருட்காட்சியை மாட்டுத் தாவணி அருகே உள்ள மாநகராட்சி இடத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அந்த இடத் தை ஜேசிபி இயந்திரம் மூலம் தயார் செய்யும் பணி நடந்தது. இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளி யானது.
இதைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே. ராஜூ மாட்டுத்தாவணியில் பொருட்காட்சியை நடத்த எதிர்ப்பு தெரிவித்தார். அங்கு பொருட்காட்சியை நடத்தினால் வாகன விபத்துகள், நெரிசல் ஏற்படும் என்பதால் தமுக்கத்திலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், தற்போது சித்திரைப் பொருட்காட்சியை தமுக்கத்திலேயே நடத்த மாந கராட்சி நிர்வாகம் முடிவு செய்துள் ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட அதி காரிகளிடம் கேட்டபோது, தமுக்கம், மாட்டுத்தாவணி உட்பட 3 இடங்களை தேர்வு செய்துள்ளோம். சென்னையில் இருந்து வரும் அதிகாரிகள் குழு பொருட்காட்சி நடத்தும் இடத்தை தேர்வுசெய்வர் என்றனர்.