தமிழகம்

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை அசோக்நகரில் நாளை (இன்று) தொடங்குகிறது. படிப்படியாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் படும். இந்த வயதுக்குட்பட்ட சுமார் 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோர்பி வேக்ஸ் தடுப்பூசி இரண்டு தவணைகளாக செலுத்தப்படும். முதல் தவணைக்கும் இரண்டாவது தவணைக்கு இடையில் 28 நாட்கள் கால இடைவெளி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் இன்று தொடங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT