மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன். படம்: ம.பிரபு 
தமிழகம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து: வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணைபோவதாக சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு துணைபோவதாக மத்திய அரசையும், தமிழக அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளில் வட மாநிலத்தவர்கள் திட்டமிட்டு பணியமர்த்துவதாகவும் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக அஞ்சல் துறையில் தமிழ் தெரியாத 946 வடமாநிலத் தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, காவிரியின் குறுக்கே மேகேத்தாட்டுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக பாஜக அரசு அறிவித்து, அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

SCROLL FOR NEXT