தமிழகம்

ஆர்.கே.நகரில் வசந்திதேவி, சிம்லா முத்துசோழன் வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக –ம.ந.கூட்டணி-தமாகா அணியின் விசிக வேட்பாளர் முனைவர் வசந்தி தேவி, திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தேமுதிக-ம.ந.கூட்டணி-தமாகா அணியின் வேட்பாளர் முனைவர் வசந்திதேவி இன்று தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதற்குப் பிறகு, திமுகவின் சிம்லா முத்துச்சோழனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விசிக வேட்பாளர் வசந்தி தேவி கூறுகையில், ‘தமிழக மக்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு ஆர்.கே.நகர் ஒரு உதாரணம். ஆர்.கே.நகர் தொகுதியில் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு வசதியும் கிடையாது. மக்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்” என்றார்.

திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழன் கூறுகையில், “ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. திமுக ஆட்சிகாலத்தில் கொருக்குப்பேட்டையில் மேம்பாலம் கட்டப்படும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், அதனை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

கொடுங்கையூர் குப்பைக்கிடங்கை அகற்றுவோம் என்று இத்தனை காலம் ஆட்சியிலிருந்தவர்கள், இப்போது கூறுகின்றனர். ஆர்.கே.நகரில் எனக்கு பெரியளவில் வரவேற்பு உள்ளது. செல்லுகின்ற இடமெல்லம் மக்கள் மனதில் மாற்றத்தை காண முடிகிறது. இந்த தேர்தலில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்” என்றார்.

SCROLL FOR NEXT