திருப்பூர்: திருப்பூரில் அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை பிடித்து, திருப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்கம், பிஹார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலம் வழியாக வங்கதேச நாட்டை சேர்ந்த ஏராளமானோர் இந்தியாவுக்குள் நுழைகின்றனர். இவர்கள் வேலை தேடி திருப்பூர் போன்ற தொழிலாளர் நகரங்களில் தஞ்சமடைவது வாடிக்கையாகிவிட்டது.
திருப்பூரில் அனுமதியின்றி தங்கியுள்ள வங்கதேசத்தினர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வீரபாண்டி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை பிடித்து, மாநகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.