தமிழகம்

திருச்செங்கோடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: உறவினர்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவி பள்ளியில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்காமல் மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நாமக்கல் - வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை கால அவகாசம் வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT