சிவகங்கை 27-வது வார்டு இந்திராநகர் பகுதியில் புகார் பெட்டி வைத்த நகராட்சித் தலைவர் துரை ஆனந்த். 
தமிழகம்

சிவகங்கையில் புகார் பெட்டி வைத்த நகராட்சி தலைவர்: 24 மணி நேரத்தில் பதில் அளிக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சிவகங்கையில் மக்கள் குறை களை தீர்க்க நகராட்சித் தலைவர் தனது வார்டில் புகார் பெட்டி வைத்துள்ளார். மேலும் புகார் அளிப்போரின் மொபைலுக்கு 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

சிவகங்கையில் பாதாள சாக்கடை, குப்பை அள்ளுவது, தெருவிளக்கு பழுது நீக்கு வது போன்ற அடிப்படை பிரச் சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, சிவகங்கை நகராட்சியை திமுக கைப்பற்றியது. தலைவராக துரை ஆனந்த், துணைத் தலைவராக கார்கண்ணன் போட்டியின்றி தேர் வாகினர்.

நகராட்சித் தலைவர் துரை ஆனந்த் அவரது தனது வார்டான 27-ல் புகார் பெட்டி வைத்துள்ளார். இதில் மக்கள் தங்களது மொபைல் எண்களை குறிப்பிட்டு புகார்களை அளிக்கலாம். புகார் அளித்த 24 மணி நேரத்தில் அவர்களது மொபைலுக்கு குறுஞ்செய்தி மூலம் பதில் அளிக்கப்படும். மக்கள் குறைகளை தெரிவிக்க நகராட்சி அலுவலகத்துக்கு அலைவதை தடுக்க புகார் பெட்டி வைத்துள்ளோம். முதற்கட்டமாக ஒரு வார்டில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பேருந்து நிலையம், அரண்மனைவாசல், நேரு பஜார், மதுரைமுக்கு போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங் களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் வைக்கப்படும். பிரச்சினைகளை பொருத்து ஒருநாள் முதல் ஒரு வாரத்துக்குள் தீர்க்கப்படும் என நகராட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT