கோட்டூர் மாகாளியம்மன் கோயில் தேரோட்டத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த தேரை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். 
தமிழகம்

கோட்டூர் மாகாளியம்மன் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர்பழனியூரில் மாகாளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம்4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்துதேர் கலசம் ஏற்றுதல், அம்மனுக்கு அபிஷேகம், மாவிளக்கு மற்றும்பூவோடு எடுத்தல், குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது. நகரின் முக்கியவீதிகள் வழியாக தேர் சென்று கொண்டிருந்தது.

தேரின் வேகத்தை கட்டுப்படுத்த தேர் சக்கரத்தின் அடியில் பெரிய மரத்துண்டுகளை பக்தர்கள் வைத்து வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டே வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த தேரின் சக்கரம் அருகே இருந்த கால்வாயில் இறங்கி, தேர் முன்பக்கமாக கவிழ்ந்தது. அப்போது பக்தர்கள் அங்கிருந்து ஓடியதால் காயமின்றி தப்பினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் கோயில்நிர்வாகத்தினர், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் தேரை மீட்டனர்.

SCROLL FOR NEXT