தமிழகம்

10 நாட்களில் ஆதரவு அலை: ராமதாஸ் நம்பிக்கை

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

தரமான கல்வி கொடுக்கப்பட் டிருந்தால், தமிழகத்தில் வன்முறை, தீவிரவாதம், பசி, பட்டினி ஏதும் இருக்காது. ஊழலும், மதுவும் இல்லாவிட்டால் தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கும். திமுக, அதிமுக கட்சிக ளால், தமிழகம் துருப்பிடித்த பழைய கட்டிடமாகிவிட்டது. ஆகவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் அன்புமணிக்கு ஆதரவு அலை வீசத் தொடங்கியுள்ளது. இன்னும் 10 நாட்களில் அந்த அலை மிக வேகமாக வீசும். 2 கோடி இளைஞர்களின் வாக்கு, பெண்களின் 50 சதவீத வாக்கு, எந்த கட்சியையும் சாராத 30 சதவீத நடுநிலையாளர்களின் வாக்குகள் எல்லாம் அன்புமணிக்குத்தான். மே மாதம் மாம்பழ சீஸன். அந்த மாம்பழ சீஸனில், தமிழகத்தில் அன்புமணி வெற்றி பெறுவார். இவ்வாறு பேசினார்.

SCROLL FOR NEXT