தமிழகம்

நாட்டுப்புறக் கலைஞர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10,000 வீதம் 500 கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினை புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும்.

31.03.2022-ல் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, உறுப்பினர் - செயலாளர்,தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028 என்ற முகவரிக்கு வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT