குருமாம்பட்டு பாண்லே பூத் அருகே தீப்பற்றி எரிந்த வேன். 
தமிழகம்

குருமாம்பேட் பாண்லே பூத் எதிரே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன்

செய்திப்பிரிவு

புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி 4-வதுகுறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (50). டிராவல்ஸ் உரிமையாளரான இவருக்கு சொந்தமான வேன் ஒன்றை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்பில் பழுது பார்க்க கொடுத்திருந்தார். அங்கு வெல்டிங் வைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று வண்டியை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

குருமாம்பேட் பாண்லே பூத் எதிரே வந்தபோது, திடீரென வேன் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் கீழே குதித்து தப்பித்தார். தீ வேகமாக பரவி, அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்து, இரு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் யாருக்கும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பேட்டரி மின்கசிவால் தீப் பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT