புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மூலம் அரசுப் பள்ளிகளில் பணியாற்ற 148 முன் மழலையர் ஆசிரி யர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், முறையே புதுச்சேரியில் 85, காரைக்காலில் 63 என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு புதுவை கல்வித்துறை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி 148 பேருக்கு முன் மழலையர் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றவுடன், ‘அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பபடும்’ என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, துறைகள் தோறும் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம்.
குறிப்பாக, கல்வித்துறையில், மழலையர் பள்ளிகளில் பாடம் கற்றுத் தர 148 ஆசிரியர்கள் ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்கப்படுகின் றனர். அதற்கான ஆணையை முதல் வர் வழங்கியுள்ளார். புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர்.புதுச்சேரியில் நாளை முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தையே நாம் பின்பற்றி வருவதால், நிகழாண்டு பொதுத் தேர்வுகளும் அதனை பின்பற்றியே நடைபெறும்.
கரோனாவால் நிகழாண்டு, குறு கிய நாட்கள் பள்ளிகள் நடந்தாலும், வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகளை திறந்து, பாடத்திட்டங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டதால், பாடங்கள் நிச்சயம் முடிக்கப்படும்.
சிறப்பு பேருந்துகள் இயக்க ஒப்பந்தம்
மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில், அதற்கான முடிவு எடுத்து, விரைவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அரசுத் துறை காலிப்பணியி டங்கள் பதவி உயர்வு, ஒப்பந்தநியமனங்கள், நிரந்தர பணியிடங் கள் ஆகியவற்றின் வாயிலாக நிரப்பி வருகிறோம். காவல்துறையில் 390 காவலர்கள் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, வரும் 19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
தற்போது பல துறைகளில் தொடர்ந்து பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக, பொதுப் பணித்துறையில் இன்று (நேற்று) 40 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.’’என்றார்.
அப்போது உடனிருந்த முதல்வர் ரங்கசாமி கூறுகையில், ‘‘அரசு துறையில் காலியாக உள்ள எல்டிசி, யுடிசி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என்றார்.
அரசு துறையில் காலியாக உள்ள எல்டிசி, யுடிசி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.