அதிமுக செயற்குழு கூட்டம் ஜூலை 2-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொயர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 2.7.2014 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.