சென்னை தலைமை செயலகத்தில் சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டிக்கு 2021-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்டதற்கான விருதை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை ஆட்சியருக்கு முதல்வர் விருது

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டுக் கான விருது வழங்கினார்.

சிவகங்கையில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பில் தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரூ.1.5 லட்சத்துக்கு 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார்.

அதேபோல் மாநிலத்திலேயே முதன்முறையாக இளையான்குடி அருகே கீழாயூர் பகுதியில் வீடற்ற 130 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. மேலும் அப்பகுதியில் பள்ளி, ரேஷன் கடை போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் தேசிய ஊன முற்றோர் அடையாள அட்டைகளை அதிகளவில் வழங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் முகாம்களை நடத்தி ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது போன்றவற்றில் மாவட்ட ஆட்சியர் சிறப்பாகச் செயல்பட்டார். இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட ஆட்சியருக்கான விருது கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT