தமிழகம்

மாமண்டூரில் நாளை மாநாடு: விஜயகாந்த் அழைப்பு

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க உள்ள வெற்றிக் கூட்டணியான தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் வரும் 10-ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

அதில் நானும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விசி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்று எழுச்சியுரை ஆற்றவுள்ளோம்.

அச்சமயம் நமது தேமுதிக மக்கள் நலக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் வந்து, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக்கிட வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT