தமிழகம்

பேரூராட்சி பதவி: மங்கலம்பேட்டை விவகாரத்தில் மவுனமாகி போனது காங்கிரஸ்

செய்திப்பிரிவு

திமுக தலைமையின் உத்தரவை மீறி, உள்ளூர் கட்சிக்காரர்கள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியை சில இடங்களில் பிடித்தனர்.

அதில் ஒன்று கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சி.இங்குள்ள தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. திமுகவைச் சேர்ந்த சாம்சத் பேகம் போட்டி வேட்பாளராக களமிறங்கி, வெற்றி பெற்றார். தலைமை அறிவுறுத்தலின் பேரில் அவரை ராஜினாமா செய்யக்கோரி கடலூர்மேற்கு மாவட்டத் திமுக நிர்வாகி கள் வற்புறுத்தினர். அவர் மறுத்து விட்டார்.

இதனிடையே, கூட்டணித் தர்மத் தின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட பத வியை வழங்க வலியுறுத்தி மங்க லம்பேட்டை பேரூராட்சியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட் டக் கட்சியினர் சில தினங்களுக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டு, திமுக தலைமையின் கவனத்தை ஈர்த்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களாக திமுக நிர்வாகிகள் பலச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

உள்ளூர் நிலைமையை தலை மைக்கு விரிவாக எடுத்துக் கூற முடிவு செய்த திமுக மாவட்ட நிர்வாகிகள், இந்த தேர்தலின் தொடக்கம் முதல் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் சரியாக நடந்து கொண்டார்களா எனக் கேள்வி எழுப்பி, அறிக்கை அளித்து, தலைமையை சம்மதிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையறிந்த, தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரியும், இதற்கு மேல் அழுத்தம் கொடுக்கவேண்டாம் என தங்கள் கட்சியி னருக்கு கட்டளையிட்டுள்ளாராம். இதனால் திமுகவின் சாம்சத் பேகமே மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவராக பொறுப்பேற்கக் கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT