மதுரை அருகே மாயாண்டிபட்டியில் போராட்டம் நடத்திய விவசாயிகள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரை அருகே எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு இழப்பீடு கோரி போராட்டம்

செய்திப்பிரிவு

மதுரை அருகே மாயாண்டிபட்டியில் எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு சமமான இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் தனசேகரன், ப.முருகன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சென்னை எண்ணூர் - தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மதுரை கிழக்கு வட்டம் அயிலாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாண்டிபட்டி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் குழாய் பதிப்பதற்கு மிகக்குறைவான இழப்பீடு வழங்கப்படுகிறது.

ஒரு சென்ட் நிலத்துக்கு ஒருபுறம் ரூ.45,000, மற்றொரு புறம் ரூ.4,000 வழங்கப்படுகிறது. இவ்வாறு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும சமமான இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT