சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் காசநோய் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் ஆஷா, உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய்த் தடுப்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் பிரபு ராவணன். 
தமிழகம்

2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு: தமிழக காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநரகம் மற்றும் பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் இணைந்து காசநோய் குறித்த கருத்தரங்கம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில காசநோய் அலுவலக கூடுதல் இயக்குநர் டாக்டர் ஆஷா பேசும்போது, ‘‘காசநோய் பாதிப்பை படிப்படியாகக் குறைக்கமத்திய, மாநில அரசுகள் தொடர்ந்துபல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் காசநோய் பரிசோதனைகள் மையங்கள் இருக்கின்றன.

இதேபோல், ஆரம்ப சுகாதாரமையங்களிலும் காசநோய் பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான, கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு லட்சம்பேரில் அதிகபட்சமாக 162 பேர்காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.

உலக சுகாதார நிறுவனத்தின் காசநோய்த் தடுப்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் பிரபு ராவணன் பேசும்போது, ‘‘இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் என்ற வீதத்தில் காசநோயால் உயிரிழக்கின்றனர். மேலும், கிராம அளவில் காசநோயைக் கண்டறிவதற்காக நடமாடும் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளன. காசநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு நேரடி வங்கிப் பரிவர்த்தனை மூலம் அரசு நிதிஅளித்து வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT