கடலூரில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியான கிருஷ்ணாலயா திரையரங்கின் முன்பு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். 
தமிழகம்

பாமக எதிர்ப்பால் செஞ்சி திரையரங்கில் சூர்யாவின் திரைப்பட வெளியீடு ரத்து: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியீடு

செய்திப்பிரிவு

நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சிமாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திரையிடப்பட்டது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்பீம்’ படத்தில் ஒரு சமூகத்தினர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய பாமக மற்றும் வன்னியர் சங்கம் அமைப்பினர், இதற்காக சூர்யா பொது மன்னிப்புக்கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் சூர்யா அளித்த விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை.

இந்நிலையில் சூர்யா நடித்த‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி பாமக மாணவர் சங்கத்தினர் கடந்த வாரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

எனினும், சூர்யா நடித்த திரைப்படம் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்றுவெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண வந்தவர்கள் தீவிரபரிசோதனைகளுக்குப் பின்னரேஅரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். செஞ்சியில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் பாமகவின் வேண்டுகோளை ஏற்று இப்படம் திரையிடப்படவில்லை.

புதுச்சேரி கிராமப் பகுதிகளில் சில திரையரங்குகளில் பாமக எதிர்ப்பால் முதல் காட்சி ரத்தாகிபிற்பகலில் இருந்து திரையிடப்பட்டது. இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் 2 திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

SCROLL FOR NEXT