தமிழகம்

ம.ந. கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது: இரா.முத்தரசன் உறுதி

செய்திப்பிரிவு

மக்கள் நலக் கூட்டணியை பிளவு படுத்தும் முயற்சி வெற்றிபெறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

பலம்பொருந்திய மக்கள் நலக் கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஊடகங்களை பயன்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிடும் என தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சிறுதாவூர் பங்களாவுக்கு கண்டெய்னர் வாகனங்கள் மற்றும் லாரிகளில் பணம் சென்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ள கருத்து மிகச் சரியானது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.

எங்கள் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் ‘தவறான முறையில் வந்த பணமாக இருந்தால் அதை கட்சித் தொண்டர்கள் பறிமுதல் செய்ய வேண்டும்’ என கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறிய கருத்துக்கு மாறாக சில தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் செய்திகள் வெளி யிடுவது கண்டனத்துக்குரியது. கூட்டணித் தலைவர்களிடையே மோதலை உருவாக்கி பிளவுபடுத்த யார் முயற்சி செய்தாலும் அது வெற்றிபெறாது.

இவ்வாறு அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT