சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்த, கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பரிதாநவாப் வெள்ளி செங்கோலை கொடுத்து வாழ்த்து பெற்றார். 
தமிழகம்

வெள்ளி செங்கோல் கொடுத்து முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் பரிதாநவாப் வெள்ளி செங்கோலை தமிழக முதல்வரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த பரிதாநவாப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது கிருஷ்ணகிரி நகராட்சியில் 2-வது முறையாக நகராட்சித் தலைவராக பொறுப்பேற்ற பரிதாநவாப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, பெரியசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான செங்குட்டுவன், கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் ஆகியோர் உடனிருந்தனர். 

SCROLL FOR NEXT