‘திமுக வெளியிட்டது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இல்லை. அது மக்களின் தேர்தல் அறிக்கை’ என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப் போரூர், செங்கல்பட்டு, மதுராந்த கம், செய்யூர் ஆகிய தொகுதி களில் போட்டியிடும் திமுக வேட் பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனி மொழி நேற்று பிரச்சாரம் மேற் கொண்டார்.
திருப்போரூர் தொகுதி கேளம் பாக்கத்தில் நடைபெற்ற பிரச் சாரத்தில் அவர் பேசியதாவது: முதல் வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டு களில் காணொலி காட்சி ஆட்சியை யும், ஸ்டிக்கர் ஆட்சியையும்தான் நடத்தினார். அவர் மக்களிடம் இருந்து விலகி தொடர்பு எல் லைக்கு அப்பால் இருந்தே ஆட்சி நடத்தினார். அவருக்கு மக்கள் படும் சிரமங்கள் தெரியாது.
ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின்போது பலதரப்பு மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டிருக்கிறோம். 4 லட்சத்து 50 ஆயிரம் பேரிடம் மனுக்களை பெற்று இருக்கிறோம். பொதுமக்கள் கூறிய கருத்துகள் அடிப்படையில்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித் திருக்கிறோம்.
அது திமுகவின் தேர்தல் அறிக்கை இல்லை. மக்களின் தேர்தல் அறிக்கை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதில்லை. தமிழகத் தில் திமுக தலைவர் கருணா நிதியால் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும். நல்லாட்சி அமைய வேண்டுமென்றால் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.