தமிழகம்

அரூரை விசிகவுக்கு தந்தது ஏன்? - மார்க்சிஸ்ட் எம்எல்ஏ விளக்கம்

செய்திப்பிரிவு

மக்கள் நலக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரூர் தொகுதி, தற்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக திரு.வி.க.நகர் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளித்துள்ளது.

அரூரை விசிகவுக்கு விட்டுக் கொடுத்தது குறித்து அந்த தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிட்டிபாபு கூறியதாவது:

இடதுசாரிகளின் கோட்டையான அரூரில் தனித்து நின்றாலே நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், அரூர் தொகுதி வேண்டும் என்று விசிக நிர்வாகிகள் பிடிவாதம் காட்டினர். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபடுகிறோம். எனவே, கூட்டணிக்குள் குழப்பம் வரக்கூடாது என்பதால் அரூரை அந்தக் கட்சிக்கு விட்டுக் கொடுத்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT