தமிழகம்

19-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

செய்திப்பிரிவு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 19-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வரும் 19-ம் தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அன்றைய தினம் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு மதுக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்

இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபா னங்கள் விற்பனை செய்யும் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள், ஓட்டல்கள், ஓட்டல்களில் அமைந் துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 19-ம் தேதி மூடப்படவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT