திமுக பொருளாளர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கொளத்தூர் தொகுதியில் போட்டி யிட அனுமதிக்கக்கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் பாலசுப் பிரமணியன் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டு களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர்களிடமிருந்து கொளத்தூர் தொகுதிக்கு புதிதாக வேட்புமனுவை பெறக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டேன். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. ஆகவே இருவரும் கொளத்தூர் தொகுதி யில் போட்டியிடக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், இதுதொடர்பாக தேர் தல் ஆணையம் மட்டுமே நடவடிக் கை எடுக்க முடியும். மேலும் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத் துடன் தொடரப்பட்டுள்ளது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்